Saturday 1 March 2014

THE SIDDHAS SPEAK ABOUT AGATHIYAR

The Siddhas have very high regard for Agathiyar. They look up towards him as Guru Muni. In the following revelations from the Nadi, the Siddhas praise Agathiyar.

Konganar has this to say about Agathiyar:

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழி சொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழி முனையிலே இருக்கும் என்று
கோன் என்று சிவ ரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனை போக்கி ஆசை போக்கி
தான் என்ற ஆணவங்கள் தன்னைப் போக்கி
நாடுவார் குருநாதன் மோட்சம் தானே

Agathiyar is praised in a traditional hymn as follows:

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானைச்
செஞ்சாலி வயற் பொழில் சூழ் தில்லை  மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமுமில்லை  ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி உண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்பாம்

Thirumular coins the following hymns about Agathiyar (Source: Thirumula Devan Agatheesarai Pugalnthu Suvadi Moolam Aruliya Arutkavigal - Arul Gnana Aran Sirappu - Agathiyan Arul Moopu by Sri Agathiyar Sanmarga Sangam Turaiyur)

காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு
கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து
ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று
ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே

தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ
தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு
கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி
குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு

அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே
அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு
குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன்
குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்

கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை
குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார்
எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம்
ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி

கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம்
கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம்
சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள்
சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்

கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார்
கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள்
எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான்
எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்

கும்பன் தான் ஔடதமும் நவக்கோளும் தான்
கும்பன் தான் குவலயமே வேறு ஏது
கும்பன் என்றால் ஆயிரத்தெட்டு  அண்டமெல்லாம்
குறுகி நின்று நடு நடுங்கும் பராக்கிரமங்கள்

பராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்
பாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை
பராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்

கும்பன் சொன்னால் குளவிகூட குதிறையாகும்
குருமுனிக்கு கிரியாவும் கடுகாய் நிற்கும்
கும்பனையே வணங்கியோர்க்கு குறைகளண்டா
குறையில்லா காப்பாக இருப்பார் என்றும்

Pulipaani lists out all the praises of Agathiyar by the other Siddhas (Source: Maagaan Pulippaani Sidhar Aasi Kaandam - Gnanigal Suvadi Moolam Aruliya Arul Vaakku by Sri Agathiyar Sanmarga Sangam Turaiyur)

ஆசியதும் கூறுகின்ற என் குருநாதா
அடிபணிந்து புலிப்பாணி உரைப்பேனிப்போ

Beginning with Bhogar:

பாசமுடன் அகத்தியனின் அருளை வேண்டி
பகலிரவாய் நாமத்தை செபித்துக் கொண்டு
செபித்து திரிகின்ற மக்கள் நீங்கள்
சிறப்புடன் இப்புவியில் வாழ்வீரப்பா
தப்பில்லா கலியுகத்தில் உயர்ந்து வாழ்வீர்
தவமுனி அகத்தியனை நினைத்துவிட்டால்
நினைத்தாலே ஈரேழு சென்ம பாவம்
நீங்கிடுமே என்றுமே போகர் சொன்னார்

Valluvar:

நினைவுகொண்ட முனிவரெல்லாம் தவமிருந்து
நானிலத்தில் தவம் செய்து அகத்தியம் கண்டார்
அகத்தியத்தை கண்டதொரு முனிவரெல்லாம்
அகிலத்தில் ரிஷிகளாய் வாழ்வார் இன்று
ஜெகத்திலே மாந்தர்கள் அகத்தியத்தை
சிறப்புடன் பூசித்தால் தேவராவார்
தேவராவார் என்றுமே வள்ளுவர் சொன்னார்

Shivavaakiyar:

தெரிந்திட்ட மாந்தர்கள் பூசை செய்து
பலவினைகள் நீங்கியே பல்லாண்டு வாழ்ந்தார்
பாருலகில் பலசிறப்பு அகத்திய நாமம்
அகத்திய நாமமதும் செபித்து நின்றால்
அகிலத்தில் வினையில்லா சேய் பிறக்கும்
புகழுடன் சிவவாக்கியர் கூறி நின்றார்

Avvaiyaar:

பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்வதற்கு
வாழ்வதற்கு அகத்திய நாமம் பெருமருந்தாகும்
விளக்கமுடன் கூறினார் ஔவையார் தானும்

Paambaatti Sidhar:

தாழ்வில்லா அகத்தியரை வணங்கி நின்றால்
தரணியிலே மரணமில்லா வாழ்வார் என்று
என்றுமே கூறி நின்றார் பாம்பாட்டி சித்தர்

Pulipaani continues with the lists:

இப்படியே சித்தர்கள் முனிவர்களெல்லாம்
நான்கு யுகங்களாய் அகத்தியர் மகிமை
நல்லதை கூறியே யுகம் போற்ற வாழ்ந்தார்

Machamuni:

போற்றிடவே  மும்மூர்த்தி தேவர்களும்
புனிதமுள்ள சித்தர்களும் ரிஷிகளெல்லாம்
குற்றமில்லா கணபதியும் முருகனோடு
கண்டதொரு தேவதைகள் கணங்களோடு

கணங்களுடன் பூதங்கள் நவக்கோள்கள்
குவலயத்தில் காண்பதொரு நிறங்களெல்லாம்
மணம் வீசும் நறுமணங்கள் திசைகள் பத்தும்
முழுமையும் இவ்வுலகம் அகத்தியம் என்று
என்றுமே கூறிட்டார் மச்சமுனி நூலும்

And finally Pulipaani too has something to say:

இவ்வளவு அற்புதங்கள் ஒன்றென்றால் அகத்திய நாமம்
என்றென்றும் நாமத்தை செபித்து விட்டால்
செபித்தோர் முதல் இலட்ச மக்கள் பலனடைவார்

அடைந்திடும் நாமத்தை உலகோர்கெழுதி
அறிய செய்வோர் அகத்தியருக்கும் சேயுமாவார்
எடுத்துரைக்க இதுகாலம் போராதப்பா
இதுக்கொரு விதியுண்டு சித்தர் கேட்க

சித்தர்கட்கு எடுத்துரைப்போம் அறிவீர்கள் நீங்கள்
சிவபெருமான் பார்வதியும் மகிழ்ந்துமிப்போ
ஒதிடவே புலிபாணி ஓடிவந்தேன்
உலகில் நீங்கள் உயர் செல்வ நிதிகளோடு

நிதிகளுடன் அதிர்ஷ்டங்கள் பெற்று வாழ
நிதி தெய்வம் இலக்குமியை வணங்கியாசி
ஒதிடவே உயர் ஞானம் கல்வி காண
உலகிலே சரஸ்வதியை வணங்கி ஆசி

ஆசியதுவுடன் பார்வதியை போற்றுகிறேன்
அருள் பொருள் இன்பமதும் நிறைவு காண
பாசமுடன் தினங்காத்து நல்வழி காட்ட
பரமசிவன் அருள் முனிவர் அகத்தியர் போற்றி

போற்றியே வணங்குகின்றேன் புலிப்பாணியிப்போ
புவிதனிலே அகத்தியத்தை வணங்கிவிட்டால்
நிறைவுபெற்ற மரணமில்லா வாழ்வடைவீர்
நினைத்தவண்ணம் நிதி செல்வம் குன்றா வாழ்வு

வாழ்வதனில் உலகமுள்ள காலம்மட்டும்
வாழ்ந்திடும் உங்கள் குடி செழித்து நன்றாய்
அழகுபட ஆனந்தமாய் வாழ்வீர் என்றும்