Saturday 21 May 2016

MURUGESANIN PULAMBAL


முருகேசனின் புலம்பல்

மாபெரும் கருணையான்...

எமக்கு அகமாய் புறமாய் இருந்து என் சொல் செயல் ஆகிவற்றை சிறப்புற செய்வித்து,

ஒவ்வொரு நிகழ்விலும் நின் கருணையை உணர்த்தி,

நான் எங்கு இருந்து நினைத்தாலும், எப்படி இருந்து நினைத்தாலும், ஆகதூய்மை புறதூய்மை இல்லாமல் நினைத்தாலும்,

உனக்கு பிடித்தது பிடிக்காதது என்று எதைசெய்துகொண்டு நினைத்தாலும்,

இளம் வயதில் எமக்கு பெரியதாக தெரிந்த அணைத்தும் இன்று அற்பமாக தெரியும்பொது,

உமக்கு அற்பமாக தெரியும் அனைத்தையும் எமக்காக இன்றுவரை வளங்கும்,

எமக்கு அருளியது போதாது என்று,

எமக்கு நிரந்தரம் என்று நான் எண்ணிய, நிலையற்ற உறவுகள், நண்பர்கள், சொந்தங்கள் என்ற பலர் வேண்டுவன அருளவேண்டி கேட்டபோது அருளிய,

இதற்கு மேலாக நின் அடியார் போல நடித்துக்கொண்டு,

உன்னை இன்றுவரை முழுமையா பற்றமுடியாமல் மாயாசக்திகள் வசம் சிக்கிக்கொண்டு இருந்தாலும் கூட,

எமக்கு வேண்டுவன யாவையும் யாம் வேண்டும் வண்ணம் அருளி,

எம்மை இமைபோல காத்து அருளும் நின் கருணையை என்னவென்று சொல்ல!!!

ஈசா ! நேசா ! என் அப்பா !

நின் மாபெரும் கருணையை எம்மை உணரவைப்பா !!!

உணர்ந்து உய்ய ஏங்கும் அடியேன்...


ஈசனே நின் திருவருளை உணராமல்

நேற்றைய கனவுகளை அடைய இன்று முயன்றுகொண்டு

நாளைய மலத்தை வெளியேற்ற இன்று சுவையென்று நினைத்து எதைஎதையோ நாடி உண்டு கொண்டு

நாளைய பிணங்களுக்காக உழைத்துக் கொண்டு,

அதனிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் என்னுடைய ஆசைகளை அடக்கி கொண்டு நடித்து,

நாற்றமும் அசுத்தமும் கொண்டு உடலுடன் உறவுகொள்ள எதைஎதையோ செய்துகொண்டு,

மாணம், கவுரவம், என்று பிறக்கும் போது இல்லாத ஒன்றை இப்பொது இருப்பதாக நினைத்து கொண்டு,

அது நிலைக்கும், இது காப்பாற்றும், என்று எதைஎதையோ நம்பிக்கொண்டு அதன் பின்னே ஓடிக்கொண்டு,

இல்லாத ஒன்றை இருப்பதாக கருதிக்கொண்டு அதையெல்லாம் பேணி காக்கிறேன் என்று அலைந்துகொண்டு,

என்றும் எப்போதும் உடனிருந்து மேல்கூறிய யாவும் அற்பமானது என்று அறிந்தும் !!

அதை அருளியாவது இவனை மகிழ்விப்போம் என்று தன்னை வெளிக்காட்டாமல் அருளிய வள்ளலே !!!

நின்னை என்னுளே உணர்த்தியபோதும் பொய்யை விட்டு விலக முடியாமல் இருக்கின்றனே பெருமானே ???!!

மெய்யுடன் லயிக்கும் மேன்மை வேண்டி அடியேன்.